sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமடைந்துள்ள நகர், புறநகர், கிளை நுாலகங்களை சரிசெய்யுங்க

/

சேதமடைந்துள்ள நகர், புறநகர், கிளை நுாலகங்களை சரிசெய்யுங்க

சேதமடைந்துள்ள நகர், புறநகர், கிளை நுாலகங்களை சரிசெய்யுங்க

சேதமடைந்துள்ள நகர், புறநகர், கிளை நுாலகங்களை சரிசெய்யுங்க


ADDED : மே 30, 2025 03:42 AM

Google News

ADDED : மே 30, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட மைய நுாலகம், 14 முழு நேர கிளை நுாலகங்கள், 48 கிளை நுாலகங்கள், 90 ஊர்புற நுாலகங்கள், 22 பகுதி நேரம் என 175 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதில் மாவட்ட மைய நுாலகம் தொடங்கி முக்கியமான இடங்களில் உள்ளவை மட்டுமே சரியாக செயல்படுகின்றன. இதர நுாலகங்கள் முறையாக செயல்படுவதில்லை. நகர் பகுதியை தவிர ஊரகப்பகுதிகளில் உள்ள நுாலகங்களின் கட்டடங்களும் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக கிராம மக்கள், படிப்பை நிறுத்தியோர், தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியின் தலைமை இடத்திலும் ஊர்ப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டன.

இவற்றில் எத்தனை நுாலகங்கள் முழுமையாக செயல்படுகின்றன, தினசரி எத்தனை வாசகர்கள் வந்து படிக்கின்றனர் என்பது கேள்விக்குரியாக உள்ளது.

ஊர்ப்புற நுாலகங்களை முழுமையாகப் பயன்படுத்த மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டிலும் பெரும்பாலாவை சிதிலமைடந்து உள்ளன. இதேபோல் இவற்றை முறையாக பராமரிப்பதும் இல்லை. சில இடங்களில் நுாலகம் பெரும்பாலும் பூட்டியே உள்ளது. பல செயல்படுவதே இல்லை. பழைய கட்டடங்களில் செயல்படுவது, வாடகை கட்டடங்களில் இடவசதியின்றி இருப்பது என்பது போன்ற பல்வேறு காரணங்களால் நுாலகங்கள் காணாமல் போகின்றன. புத்தகங்களை கையில் எடுத்து படிக்கும் பழக்கம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் நுாலகங்கள் எல்லாம் பாழடைந்த கட்டடங்கள் போல் இருக்கும் நிலையில் அங்கு போகும் ஆர்வமே பலருக்கும் வருவதில்லை. அதை பெற்றோர்களும் வலியுறுத்துவதும் இல்லை.

பராமரிப்பதை விட்டு புதிதாக நுாலகங்கள் கட்டப்படும் என அறிவிப்புகள் வெளியாவதும் வேடிக்கையாகிறது.

ஏற்கனவே இணைய உலகத்தில் இளைஞர்கள் வாசிப்பு பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவர்கள் வரி பணத்தில் செலவு செய்து கட்டப்பட்ட நுாலகம் மூடிக்கிடப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது ஒரு புறம் இருக்க மாவட்ட மைய நுாலகம் போன்ற இடங்களில் போட்டி தேர்வு மாணவர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் பொதுமக்களாகிய வாசர்களுக்கும் சேர்த்துதான் நுாலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்து கொள்வதால் வாசகர்கள் நுாலகங்களுக்கு வருவதை தவிர்த்து வரும் சூழல் சமீபகாலமாக உருவாகி வருகிறது. கல்விக்கும், மாணவர்களின் நலனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் நுாலகங்கள் குறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us