ADDED : ஆக 20, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஆக.21-
வத்தலக்குண்டு காந்திநகர் மாற்று வழிப்பாதை முதற்கட்ட பணிகள் ஆக.,24ல் துவங்கும் என செயல் அலுவலர் ஆஷாராணி தெரிவித்தார்.
வத்தலக்குண்டு காந்திநகர் மாற்று வழிப்பாதைக்கு 2000 நபர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. கையெழுத்து படிவங்களையும், கோரிக்கை மனுவையும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் வத்தலக்குண்டு காந்திநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வழங்கினர்.
அவர்களிடம் செயல் அலுவலர் ஆக.,27ல் முதற்கட்ட பணிகள் துவங்கும் என உறுதி அளித்தார். தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சிதம்பரத்திடமும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
