ADDED : ஜன 28, 2026 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், * திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளயில் தாளாளர் தாமோதரன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. செயலாளர் நளினி, முதல்வர் மலர்விழி பங்கேற்றனர்.
* திண்டுக்கல் ஆர்.எம். காலனி மேடா வித்யாலயாவில் தாளாளர் வனிதா கொடியேற்றினார்.
* திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் வானவில் பார்வையற்றோர் காப்பகத்தில் தலைவர் கணேசன் கொடியேற்றினார்.
நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ரமேஷ்பாபு, வேல்ராஜ், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, சரவணன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.* திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாவட்ட கால்பந்து கழகச்செயலாளர் சண்முகம் கொடி ஏற்றினார்.

