UPDATED : நவ 24, 2026 07:30 PM
ADDED : நவ 24, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
அய்யலுார் இந்திரா நகரில் குறிப்பிட்ட மக்கள் வசிக்கும் நிலையில் பழைய சர்வே எண்ணாக இருந்தபோது நிலத்திற்கு மதிப்பு வழங்கப்பட்டிருந்தது.
புதிய சர்வே எண் வழங்கிய பின்னர் அப்பகுதிக்கு ‘ஜீரோ’ மதிப்பு என மாறியுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் நிலத்தை விற்பது, வங்கிக்கடன் பெறுவது உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியை ஆய்வு செய்து ‘ஜீரோ’ மதிப்பை நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர், தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
