தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழைநீர் வடிகால்களை துார்வார கோரிக்கை

மழைநீர் வடிகால்களை துார்வார கோரிக்கை

மழைநீர் வடிகால்களை துார்வார கோரிக்கை


UPDATED : மே 17, 2026 06:26 PM

ADDED : மே 17, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 06:26 PM ADDED : மே 17, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்களை துார்வாரி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ரோட்டு பகுதிகளில் உள்ள வடிகால்வாய்கள் பராமரிப்பின்றி இருப்பதால் பெய்யும் மழைநீரானது வடிகால் வாய்க்காலுக்கு செல்லாமல் வழியிலேயே தேங்கி விடுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல இடங்களில் வடிகால் உயரமாகவும் ரோடு தாழ்வாகவும் உள்ளதால் மழைநீர் தேங்குகிறது. புல் பூண்டுகள் முளைத்து நீரோட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு தேங்கும் கழிவுநீர் கொசுக்களின் உற்பத்தி கூடமாக மாறுகிறது. இதனால் பலவித நோய்த்தொற்று பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

மழைநீர் வடிகால்களை துார்வாரி தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த பருவமழை காலம் தொடங்குவதற்குள் இப்பணியை விரைந்து நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.

இதுதவிர நகராட்சி பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்கடைகளில் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us