அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி
அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி
ADDED : அக் 25, 2026 12:02 AM
அ நிறம் | அளவு
நத்தம்: தினமலர் செய்தி எதிரொலியாக நத்தம் அருகே சுண்டைக்காய்பட்டியில் குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பூதகுடி ஊராட்சி சுண்டைக்காய்பட்டியில் சேதமடைந்த ரோடால் கிராம மக்கள் அவதியடைந்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
பி.டி.ஓ.க்கள் முருகேஸ்வரி, ஜெயக்குமார், ஊராட்சி செயலர் வீரபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சுண்டைக்காய்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு குடிநீர், தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
