ADDED : ஜூலை 28, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம்-கோவில்பட்டியில் தமிழ்நாடு வ.உ.சி., இளைஞர் பேரவை சார்பில் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளிக்கு இடம் வழங்கிய கல்வித்தந்தை துரைசாமிபிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பேரவை மாநில பொருளாளர் சரவணச்செல்வம் தலைமை வகித்தார். துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை தலைவர் கந்தசாமி, அவைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், உறுப்பினர்கள் மணிவண்ணன், ராஜேஷ்குமார் கலந்து கொண்டனர்.

