/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சில்லரை பிரச்னை இனி இருக்காது பஸ்களில் கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,
/
சில்லரை பிரச்னை இனி இருக்காது பஸ்களில் கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,
சில்லரை பிரச்னை இனி இருக்காது பஸ்களில் கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,
சில்லரை பிரச்னை இனி இருக்காது பஸ்களில் கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,
ADDED : பிப் 13, 2025 06:05 AM

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,கார்டுகள் மூலமாக கட்டணம் செலுத்த மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் நெடும்துாரம் பயணிக்கும் பயணிகள் இனி பணம் இல்லாத பரிவர்த்தனை மூலம் பயணிக்கலாம்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் பெற கண்டக்டர்களுக்கு கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் வகையிலான மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளது.
இனி பயணிகள் தங்கள் அலைபேசிகள் மூலம் கூகுள் பே, போன் பே, பே.டி.எம்., போன்ற பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தி டிக்கெட்டுக்கான பணத்தை எளிதில் செலுத்தலாம்.
திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் விஜயகுமார் கூறியதாவது: சில தினங்களுக்கு முன் எங்கள் டெப்போக்களுக்கு கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.,கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மிஷின்கள் வந்தது. இதை பயன்படுத்துவதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பொது மக்கள் பணத்தை வீட்டில் மறந்து வந்தால் கூட அலைபேசி செயலி மூலம் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்றார்.

