ADDED : ஆக 31, 2025 04:23 AM
வேடசந்துார்: வேடசந்துார் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 36 வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ஜி.சுவாமிநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கவேல் வரவேற்றார்.
சங்க செயலாளர் மருதையப்பன் ஆண்டறிக்கை ,பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். ஓய்வு அலுவலர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் முத்துக்குமரவேலு பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியாக மத்தியரசு ரூ. ஆயிரம் வழங்கி வருவதைப் போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வேடசந்துார் சங்க நிர்வாகிகள் ராஜா சண்முகம், லுார்து ராஜ், சுந்தரராஜ்,பழநி தங்கவேலு, நிலக்கோட்டை இருளப்பன். வத்தலகுண்டு ஆரோக்கியதாஸ், ஒட்டன்சத்திரம் நாட்ராயன், வாசன் கண் மருத்துவமனை மேலாளர் விஜயன் பிரான்சியஸ் பங்கேற்றனர். துணைத் தலைவர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

