ADDED : மார் 01, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணை வழங்க வேண்டும். வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம்,தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 3வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுகந்தி,அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி,சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜெஸி,மாநகராட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் பங்கேற்றனர்.

