/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பு போராட்டம்
ADDED : மார் 03, 2026 05:42 AM

திண்டுக்கல்: வருவாய் நில அளவை துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்டட ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றும் தொடர்ந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். மாதர் சங்கத்தலைவர் பாக்கியம், செயலாளர் பாப்பாத்தி கலந்து கொண்டனர்.

