UPDATED : அக் 29, 2026 11:33 PM
ADDED : அக் 29, 2026 11:05 PM

திண்டுக்கல்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.,29) ஆர்ப்பாட்டம் நடந்தது.
சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலதாமதம் இன்றி உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபட்டதற்கு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் 2023ல் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
