தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழையில் சேதமான நெற் பயிர்கள்

 மழையில் சேதமான நெற் பயிர்கள்

 மழையில் சேதமான நெற் பயிர்கள்


ADDED : மார் 20, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் கதிர் முற்றிய நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பழநி பாலசமுத்திரம் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிர்கள் பயிரிட்டுள்ளனர். மூன்று மாதம் விளைந்த பயிர்கள், கதிர்கள் முற்றி சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து வயலில் உள்ள நீரில் மூழ்கி பாழாயின.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us