UPDATED : ஜூன் 06, 2026 04:21 PM
ADDED : ஜூன் 06, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு:கட்டகாமன்பட்டியில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராமத்தினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் தேனி ரோட்டில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களை வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கவுதமன் தலைமையிலான போலீசார் கலைத்தனர். அங்கு வந்த பி.டி.ஓ., கிருஷ்ணனை சூழ்ந்த கிராமத்தினர் கூறுகையில், 'எப்போதாவது விநியோகிக்கும் குடிநீர் உப்புத்தன்மையுடன் உள்ளது. குடிநீர் குழாய்கள் சாக்கடை வழியாக செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. சுகாதாரமான குடிநீரை சீராக வழங்க வேண்டும்' என்றனர்.
