UPDATED : மே 16, 2026 07:15 PM
ADDED : மே 16, 2026 06:31 PM

அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை வெள்ளபொம்மனபட்டி ஊராளிபட்டி தார் ரோடு பணி 3 மாதமாக கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன் வடமதுரை ஒன்றியத்தில் பல இடங்களில் தார் ரோடு புதுப்பித்தல் பணிக்கு டெண்டர் விடப்பட்டன. தொடர்ந்து அனைத்து பகுதியிலும் ஒப்பந்ததாரர்கள் ரோடுகளை பெயர்த்தனர். தேர்தல், ஆட்சி மாற்றம் காரணமாக பில் தொகை கிடைப்பதில் தாமதம் என பெரும்பாலான இடங்களில் ரோடு பணிகள் 3 மாதமாக கிடப்பில் உள்ளன.
இதனால் கூர்மையான ஜல்லிக்கற்கள் மீது நடந்தும், வாகனங்களை செலுத்தும் நிலை உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பாதியில் நிற்கும் ரோடு பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
