ADDED : ஜன 12, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி சாரண சாரணியர் இயக்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வேடசந்துார் ஆத்து மேட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சாரண சாரணியர் இயக்க ஆணையர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை, சாரண சாரணிய இயக்க மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. போக்குவரத்து போலீசார் ஜான்பீட்டர், சரஸ்வதி பங்கேற்றனர்.
