ADDED : ஏப் 23, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் அன்பழகனை கண்டித்தும், தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ,கோட்டத் தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டச் செயலாளர் அருள்தாஸ், துணைத் தலைவர் முருகேசன், மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர். கோட்டப் பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

