ADDED : ஆக 20, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக எடுத்து ஊதியம்,ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடத்த முயன்ற சாலை பணியார்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் கோட்ட அலுவலகம் முன்பு முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முபாரக் அலி, ஜெயசீலன் ,சாலைபணியாளர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் பேசினர். வட்டத்தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.