ADDED : ஆக 18, 2026 09:32 PM
திண்டுக்கல், ஆக.19 -
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்து விட்டு பராமரிப்பு பணிகளை அரசே நடத்த வேண்டும், கிராமப்புற இளைஞர்களை சாலைப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கோட்டத் துணைத்தலைவர் ராமமூர்த்தி, கோட்டச் செயலாளர் ரமேஷ்வரன் கோரிக்கை உரை ஆற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், சாலை ஆய்வாளர்கள் சங்க கோட்டச் செயலாளர் மாரியப்பன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க அமைப்பாளர் கனகராஜ் வாழ்த்தி பேசினர். நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராஜமாணிக்கம் பேசினார். கோட்டப் பொருளாளர் கிஷோர் நன்றி தெரிவித்தார். பின் நிர்வாகிகள் கோட்டப்பொறியாளர் சுவாமிநாதனிடம் மனு அளித்தனர்.
