ADDED : ஜன 11, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 1490 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் கருப்புத்துணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் அருள் தாஸ் வரவேற்றார். டி.என்.ஜி.இ.ஏ.,மாவட்ட தலைவர் முபாரக் அலி, டி.என்ஹெச்.ஆர்.இ.ஏ.,ராஜமாணிக்கம் பங்கேற்றனர். கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.