/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எச்சரிக்கை பலகை இல்லாமல் தொடரும் ரோடு பணியால் அவதி
/
எச்சரிக்கை பலகை இல்லாமல் தொடரும் ரோடு பணியால் அவதி
எச்சரிக்கை பலகை இல்லாமல் தொடரும் ரோடு பணியால் அவதி
எச்சரிக்கை பலகை இல்லாமல் தொடரும் ரோடு பணியால் அவதி
ADDED : பிப் 11, 2026 06:22 AM

நிலக்கோட்டை: அணைப்பட்டி, மட்டப்பாறை ரோட்டில் எச்சரிக்கை பலகை இல்லாமல் தொடரும் ரோடு பணியால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
அணைப்பட்டி முதல் விளாம்பட்டி மட்டப்பாறை செல்லும் வழிகளில் அடிக்கடி அறிவிப்புகள் இன்றி பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இதனால் விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.
ரோட்டின் நடுவே பள்ளங்கள், எம்.சான்ட், செம்மன், கற்கள் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குழாய் பதித்தல், பாலம், ரோடு போன்ற எவ்வித வேலைகளுக்கான முன் எச்சரிக்கை பேனர்கள், எச்சரிக்கை அறிகுறிகள் எதுவும் இல்லை.
எப்போது வேண்டுமானாலும் விபத்து உயிர் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என
இப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.