ADDED : ஜன 06, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மனமகிழ் மன்றத்தில் புகுந்த கும்பல் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.62ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது.
வடமதுரை இ.பி. காலனியை சேர்ந்தவர் சாரங்கபாணி 51. திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் வடமதுரை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் பின்புறம் மனமகிழ் மன்றம் நடத்துகிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு முகத்தில் மாஸ்க் அணிந்த படி 6க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்தது.
கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி சாரங்கபாணி, அங்கிருந்த சிலரையும் மிரட்டி ரூ.62 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
