ADDED : மார் 12, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: குய்யவநாயக்கன்பட்டியில் கத்தியை காட்டி மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள் பெண்ணிடம் 7 பவுன் நகை,1.5 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
கன்னிவாடி அருகே குய்யவநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி முருகன். தோட்டத்து சாலையில் மனைவி செவந்தியம்மாள் 50, உடன் வசித்து வருகிறார். முருகன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் செவந்தியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர்.
அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின், தாலி, தோடு உட்பட 7 பவுன் நகை, பீரோவில் இருந்த 1.40 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு தப்பியது. அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் கொண்டு கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
