ADDED : ஜூலை 19, 2025 02:50 AM
நத்தம்: -நத்தம் அருகே சிறுகுடி சாலை ஊரணிக்கரையில் உள்ள வீட்டில் தாய் சொர்ணத்துடன் 70, ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் 47, வசித்து வந்தார்.
ஜூன் 16 இரவு இவரது வீட்டிற்குள் புகுந்தமுகமூடி கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் எங்கு உள்ளதுஎன கேட்டு பீரோவை திறக்க கூறியது. நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது.
இதில் தொடர்புடைய மேலுார் குளத்துகரை பகுதியை சேர்ந்த பிரபாகரன் 29, குமார் 28, முத்து வெங்கடாஜலபதி 29, காளாப்பூரை சேர்ந்த கார் டிரைவர் மணிமொழியன் 45, மேலுார் கொட்டக்குடியை சேர்ந்த பாக்கியராஜ் 39, கீழ வயலை சேர்ந்த பாபு 41, நத்தம் எம்.ஜி.ஆர் நகரை நகரை சேர்ந்த பிரபாகரன்60, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி., பிரதீப் உத்தரவின் பெயரில் கொள்ளை முயற்சிக்கு மூளையாக செயல்பட்ட பிரபா 29, சாந்தகுமார் 28, பாக்கியராஜ் 39, ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.