/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' பூங்காவில் துளிர்விடும் ரோஜாக்கள்
/
'கொடை' பூங்காவில் துளிர்விடும் ரோஜாக்கள்
ADDED : ஏப் 20, 2025 04:35 AM

கொடைக்கானல் :   கொடைக்கானல் ரோஜா பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு ரோஜாக்கள்  பூக்கத் தொடங்கி உள்ளன.
கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்குவது வழக்கம். தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளுகுளு நகரான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்களை கண்டு ரசிப்பர். இதில் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள 10 ஏக்கர் பரப்பிலான ரோஜா பூங்காவை காண தவறுவதில்லை.
இப்பூங்காவில் 1500 வகையான ரோஜாக்களும்,16 ஆயிரம் செடிகளும் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ரோஜா செடியில் கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தன. கோடை வெயிலின் போது பெய்த கனமழையால் செடிகள் நன்கு தளிர்த்து தற்போது அரும்புகள் வெளிவரத் துவங்கி உள்ளன. இதற்கிடையே ஆங்காங்கே பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூக்கத் துவங்கியுள்ளன. வருகை தரும் சுற்றுலா பயணிகள் துளிர்விடும் ரோஜாக்களை கண்டு ரசித்தனர்.

