/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர மரங்களை வெட்டியவர்கள் கைது
/
ரோட்டோர மரங்களை வெட்டியவர்கள் கைது
ADDED : அக் 21, 2024 05:28 AM
கோபால்பட்டி: கணவாய்பட்டியில் சாலையோர மரங்களை வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி பங்களாயொட்டிய சாலையோர மரங்களை சிலர் வெட்டி வேனில் ஏற்றிசென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நத்தம் திண்டுக்கல் சாலையில் நேற்று முன் தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கலாவதி சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் 40, அவருக்கு உதவிய வேன்டிரைவர் கோபிநாத்தை 21,
கைது செய்தனர். அவர்கள் வெட்டிய மரம்,வேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், நெடுஞ்சாலைத்துறையில் சாலையோரம் உள்ள காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு புளிய மரத்தை வெட்டியது தெரியவந்தது.

