நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பழநி ரோடு- தாராபுரம் ரோடு சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் விபத்தின்றி திரும்பும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரத்திற்கு நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த வழித்தடத்தில் கோவை, திருப்பூர் செல்லும் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்த ரோட்டில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன.
இந்த ரோடுயானது பழநி ரோடுடன் இணையும் பகுதியில் வாகனங்கள் பல்வேறு திசைகளில் திரும்பிச் செல்லும் போது விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. தடுக்கும் வகையில் பழநி ரோடு- தாராபுரம் ரோடு இணையும் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

