/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மில் அதிபர்களிடம் ரூ.1.3 கோடி மோசடி
/
திண்டுக்கல் மில் அதிபர்களிடம் ரூ.1.3 கோடி மோசடி
ADDED : ஜன 04, 2025 11:20 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் காசி 58. நாகல்நகர் மெங்கில்ஸ்ரோடை சேர்ந்தவர் பிரபு50. இருவரும் வேல்வார்கோட்டை பகுதியில் துணிகள் தயாரிப்பதற்கு தேவையான காடாத்துணிகள் தயாரிக்கும் மில் நடத்துகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காடா துணிகளை ஏஜன்ட்கள் மூலம் விற்பனைக்கு அனுப்புகின்றனர். 2023ல் இவர்களுக்கு தெரிந்த ஏஜன்ட்கள் மூலம் டில்லியை சேர்ந்த பஞ்சம்சிங் 35, பெங்களூருவை சேர்ந்த அஜய்குமார் மாலி 37, அறிமுகமாயினர். இவர்கள் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் துணிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இதை நம்பிய காசி, பிரபு இருவரும் ரூ.1.3கோடி மதிப்பிலான காடாத் துணிகளை பணம் வாங்காமல் ஜெய்ப்பூருக்கு அனுப்பினர். துணிகளை பெற்றுகொண்ட பஞ்சம் சிங், அஜய்குமார் இருவரும் முறையாக பணத்தை அனுப்பவில்லை.
சந்தேகமடைந்த காசி, பிரபு நேரில் ஜெய்ப்பூர் சென்று விசாரித்த போது சம்பந்தபட்ட நிறுவனம் பூட்டியிருந்தது. அவர்கள்தெரிவித்த முகவரியும் போலியாக இருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் தமிழக டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பினர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

