/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.1316 கோடி பழநி கோயில் சொத்துக்கள் மீட்பு
/
ரூ.1316 கோடி பழநி கோயில் சொத்துக்கள் மீட்பு
ADDED : டிச 04, 2025 12:31 AM

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் 2022 மே 9 முதல் 2025 டிச.,3 வரை ரூ.1316 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பிலிருந்த கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சொத்துக்களை கோயில் நிர்வாகம் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி 2022 மே 9 முதல் 2025 டிச.,3 வரை 137.95 ஏக்கர் நிலங்கள், 8,52,883 சதுரடி மனைகள், 86,943 சதுரடி கட்டடங்கள் அடங்கிய சொத்துக்களை 467 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1316 கோடி. இவை திண்டுக்கல், கோயம்புத்துார், திருப்பூர், தேனி, கரூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீட்கப்பட்டவை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

