ADDED : மார் 18, 2026 05:59 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 5 இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 16 லட்சத்து 90 ஆயிரத்து 210 பறிமுதல் செய்யப்பட்டது.
கோதைமங்கலம் பைபாஸ் ரோட்டில் வந்த காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை இட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாசன் 52, உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.92 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர்.
* ஒட்டன்சத்திரம் : கேதையுறும்பு மின்வாரிய அலுவலகம் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சக்திவேல் தலைமையில் வாகன சோதனை நடந்தது . வெரியப்பூர் சுந்தரி பாளையத்தை சேர்ந்த குமரேசன் உரிய ஆவணங்கள் இன்றி டூவீலரில் கொண்டு வந்த ரூ.96, 500 பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் தேர்தல் அலுவலர் பிரபு முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
* வத்தலக்குண்டில் இருந்து ஆண்டிபட்டி வந்த டவுன் பஸ்சில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போதுவத்தலக்குண்டைச் சேர்ந்த அருண்பாண்டியன் 27, வைத்திருந்த பையில் ரூ.9 லட்சம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லை. தேனியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக பணத்தை கொண்டு சென்றதாக தெரிவித்தார். பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் ஆண்டிபட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
* குஜிலியம்பாறை : பாளையத்திலிருந்து குஜிலியம்பாறை வந்த காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த குஜிலியம்பாறை தொழிலதிபர் ரேணுகோபால் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
* திண்டுக்கல்: செல்லமந்தாடி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராமன் தலைமையில்வாகன சோதனை நடத்தினர். கார்த்தி என்பவர் தொழிலுக்காக சரக்கு வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சத்து ஆயிரத்து 210-ஐ பறிமுதல் செய்தனர்.
