ADDED : செப் 08, 2026 04:44 AM
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் மளிகை பொருட்கள் கோடவுன் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
நத்தம்- மீனாட்சிபுரத்தை சேர்ந்த மணி 70, வாரச்சந்தைகளில் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்கிறார். இவருக்கு அதே பகுதியில் 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டை மளிகை பொருட்களை வைக்கும் கோடவுனாக பயன்படுத்துகிறார். மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு கோடவுன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது கோடவுன் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரில் நத்தம் எஸ்.ஐ., மலைச்சாமி, போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.
