ADDED : ஏப் 16, 2026 09:38 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார் தொகுதி தேர்தல் பறக்கும் படை தலைவர் பிரஷ்னேவ் தலைமையிலான குழுவினர் வேடசந்தூர் காளனம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த காளனம்பட்டியை சேர்ந்த ரியல்எஸ்டேட் தொழில் செய்யும் மருதபிள்ளையை 60, சோதனை செய்தனர். தொழில் சம்பந்தமாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
