தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரூ.6.59 லட்சம் பறிமுதல்

 ரூ.6.59 லட்சம் பறிமுதல்

 ரூ.6.59 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 19, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 4 இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6.59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாலப்பட்டி ரோடு சிட்கோ அருகே கண்ணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதே பகுதி அருண்ராமசாமி என்பவர் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.96 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சிலுவத்துார் ரோடு காட்டுமடம் பகுதியில் தேர்தல் அலுவலர் கணேசன் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

ஜீப்பில் அதே பகுதி தண்டபாணி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் முருகபாண்டியன் தலைமையில் நடந்த சோதனையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் சேராநல்லுார் மாட்டு வியாபாரிகள் வந்த காரை சோதித்ததில் ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.2.82 லடரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் அருகே மூலச்சத்திரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி அண்ணாமலை, மனைவி பாண்டியம்மாள்தேவியுடன் காரில் வந்தார்.

ஆவணம் இன்றி வைத்திருந்த ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு மருத்துவமனையில் உறவினர் சிகிச்சை செலவிற்கு கொண்டு செல்வதாக கூறிய போதும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us