ADDED : அக் 16, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் சோளிய வெள்ளாளர் 4வது தெருவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,நிர்வாகி விஜய்மாதவன் வழக்கு விசாரணை தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த இவரை எஸ்.ஐ., எட்வர்ட் குணாளன் தரக்குறைவாக பேசி மத உணர்வை புன்படும் விதமாக பேசினார். இதையடுத்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்.எஸ்.எஸ்., ஐ சேர்ந்த 50க்கு மேலான நிர்வாகிகள் எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளிக்க கலைந்து சென்றனர்.