/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊரக வளர்ச்சி பணியாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி பணியாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி பணியாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி பணியாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2024 04:53 AM

திண்டுக்கல், : டி.என்.பி.எஸ்.சி. இசைவு பெறாதவர்கள் ,பணிக்கான சிறப்பு தகுதிகள் பெறாதவர்களுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்வதோடு பதவி இறக்கம் செய்து உத்தரவிட வேண்டும்,
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி பல ஆண்டுகளாகவே ஒரு சில நபர்கள் துாண்டுதலின் பேரிலே மாவட்ட நிர்வாகம் இயக்கப்பட்டு வரும் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் தமிழ் நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இதற்கு மாவட்ட தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் கார்த்திகேயன், ராம்குமார், அமைதிவேல் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் , நிர்வாகிகள் சேனாபதி, பரமேஸ்வரன், கந்தசாமி ,மாநில செயலாளர் ராஜேஸ்வரி, ஆலோசகர் சுப்பிரமணி பேசினர்.மாவட்ட பொருளாளர் கரோலின்மேரி நன்றி கூறினார்.

