ADDED : ஏப் 25, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள சாய் சுருதியில் சாய் பாபாவின் 14 வது ஆராதன மகோத்ஸவம் விழா ஓம்காரம், சுப்ரபாதத்துடன் கொடியேற்றப்பட்டது.
அன்னதானம், வஸ்திரதானம் வழங்கப்பட்டது. வி. எஸ்., இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தெற்கு சத்யசாய் சேவா நிறுவன மாநில தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜய கிருஷ்ணா ,சாய் சேவா நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ஸ்ரீ சத்யசாய் பால விகாஸ் குழந்தைகளின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா இசைக்கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

