ADDED : பிப் 25, 2026 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணிவேல் 32. நகைக்கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். குடும்ப தேவைக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பிப்.17ல் வீட்டில் தனியே இருக்கும்போது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். தாலுகா போலீஸ் எஸ்.ஐ., வனிதா விசாரிக்கிறார்.

