ADDED : ஆக 23, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அரவங்குறிச்சிப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரவங்குறிச்சி- சேத்துார் ரோட்டில் 2 டிப்பர் லாரிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தன. இதையடுத்து அதை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் அதை நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். நத்தம் போலீசார் சேத்துாரை சேர்ந்த ராஜசேகர் 40, மாரி 39, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
