/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாய்மை பணியாளர்கள் மறியல்: 230 பேர் கைது
/
துாய்மை பணியாளர்கள் மறியல்: 230 பேர் கைது
ADDED : டிச 09, 2025 07:48 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட துாய்மைபணியாளர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆப்பரேட்டர்கள் 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.14,593, துாய்மை பணியாளர்,துாய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.12,593 சம்பளம் வழங்கவேண்டும், பணிக்கொடை ஓய்வூதியம்வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம்நடந்தது.
மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சம்மேளன தலைவர் கணேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநிலக்குழு உறுப்பினர்மோகனா பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 165பெண்கள் உட்பட 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

