ADDED : ஜூலை 13, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சியில் குளத்துப்பட்டியில் பணிக்கு சென்ற பெண் துாய்மை பணியாளர் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தகராறு செய்து குப்பை சேகரிப்பு வண்டியையும் பறித்தார். அதிருப்தியான துாய்மை பணியாளர்கள் வழக்கமான பணிக்கு செல்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகசெயல் அலுவலர் மூலம் உறுதி கூறிய பின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.