/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் தேக்கம்; தற்போதைய மழையிலாவது நடவு செய்யுங்க

ADDED : ஜன 13, 2026 05:56 AM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2025 ல் தமிழ்நாடு அரசு ஊராட்சிகள் வாரியாக குறைந்தது 5 ஆயிரம் மரக்கன்றுகள் முதல் அதிகபட்சமாக பெரிய ஊராட்சிகளுக்கு 6 ஆயிரம் மரக்கன்றுகள் வரை வழங்கப்பட்டன.
இந்த மரக்கன்றுகளை, ஊர் மந்தை, மேய்ச்சல் புறம்போக்கு, சாலை ஓரங்கள், குளத்துக்கரை ஓரங்களில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டன. இதை நவம்பர் டிசம்பரிலே நடவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் அனைத்து மரக்கன்றுகளும் தற்போது வரை நடவு செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. கேட்டால் 6 ,7 அடி உயரம் வளர்ந்தால் மட்டுமே மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாக ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது மழை பெய்வதால் அனைத்து மரக்கன்றுகளையும் நடவு செய்து முறையாக 100 நாள் தொழிலாளர்களைக் கொண்டு முறையாக பராமரித்து திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மழையை விட்டால் இன்னும் 6, 7 மாதங்களுக்கு மழை இல்லாமல் வறட்சி காணப்படும்.