தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சஷ்டி சிறப்பு வழிபாடு

 சஷ்டி சிறப்பு வழிபாடு

 சஷ்டி சிறப்பு வழிபாடு


ADDED : செப் 03, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதேபோல் வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சுவாமி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், காமாட்சி அம்மன் கோயிலில் முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தருமத்துப் பட்டி அருகே தோணிமலை முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us