/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி, கல்லுாரி செய்திகள்...ரம்ஜான் கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரி செய்திகள்...ரம்ஜான் கொண்டாட்டம்
ADDED : மார் 21, 2026 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிகொம்பு ரோடு அச்யுதா பப்ளிக் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம் நடந்தது. பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். மாணவர்கள் அம்ரீன் தவ்லத், மயூகாநேத்ரா வரவேற்றனர். நக்ஷத்ரா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதன்மை முதல்வர் சந்திரசேகரன் பேசினார். மாணவர் சயான் குரானை வாசித்தார். மாணவர்கள் வைகாவிக்னேஷ், தாருணிகா, முகமது ம-பாஸ் கவிதை வாசித்தனர். பர்மா காலனி பள்ளிவாசல் இமாம் மவுலானா மவ்லவி கதர் பச்சாநுாரி பேசினார்.
ஏற்பாடுகளை மேலாளர் பிரபாகரன், துணை மேலாளர் ஜான் கிரிஸ்டோபர் செய்திருந்தனர்.

