
நத்தம்: நத்தம் மெய்யம்பட்டி ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார்.
உடற்கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி, அ.தி.மு.க., ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.பள்ளி துணை முதல்வர் அனுசுயா ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னாள் வணிகவியல் துறை துணை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், ராஜபாளையம் பள்ளி தாளாளர் கணேசன், பேராசிரியர்கள் சுப்பிரமணியன், இளங்கோவன், பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன்,பள்ளி நிர்வாக அதிகாரி தையல்நாயகி கலந்து கொண்டனர். ஆசிரியை மாரியம்மாள் நன்றி கூறினார்.
திண்டுக்கல்: நி.பஞ்சமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. தலைமையாசிரியர் பீட்டர் வரவேற்றார். முன்னாள் தலைமையாசிரியர் செல்வராயர் பேசினார். பி.டி.ஏ., தலைவர், எஸ்.எம்.இ., தலைவர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடு செய்தார்.