ADDED : ஆக 17, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். தாளாளர் ஸ்டீபன் லுாரது பிரகாசம், முன்னாள் மாணவர் இயக்கத் தலைவர் சண்முகம், தொழில் உரிமையாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசினார்.
தேசிய திறனறி தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பெரர் நோயல் ராஜ், ஜான் டேவிட், ஜோசப் சேவியர் உள்ளிட்டோர் செய்தனர்.
