ADDED : ஆக 30, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். மறை மாவட்ட பாதிரியார் தாமஸ் பால்சாமி, எம்.எஸ்.சி., சபையின் புரவின்ஸனல் பாதிரியார் ஜான் பங்கேற்று, ‘உழைப்புதான் உயர்த்தும். நேர்மை தான் வழி நடத்தும். கற்ற கல்வியே உற்ற துணையாக இருக்கும். மாணவர்கள் உழைப்பை கைவிடக்கூடாது.’ என, பேசினார். பள்ளி அதிபர் ஜான் பீட்டர், நிர்வாக அதிகாரி ஜான் பிரிட்டோ, முதல்வர் ஞானசீலா உட்பட பலர் பங்கேற்றனர்.
