
நத்தம்: -நத்தம் மெய்யம்பட்டி ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ, பேராசிரியர் அருணாதேவி, ஆறுமுகம் சீதையம்மாள் கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் கோபிநாத், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அமர்நாத், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, வேம்பார்பட்டி பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் அபுதாஹீர் கண்ணுமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி துணை முதல்வர் அனுசுயா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் இராமகிருஷ்ணன், ராஜபாளையம் ஐ.சி.சி., அகாடமி பள்ளித் தாளாளர் கணேசன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், பள்ளி நிர்வாக தையல்நாயகி உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியை மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.

