
கன்னிவாடி: தர்மத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்றம் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் இளம்பாரதி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முகமது ரபீக் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ விளையாட்டு, கல்வி சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆத்தூர் வட்டார தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் லட்சுமணசாமி, தருமத்துப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மருதமுத்து, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆண்டறிக்கை வாசித்தல், பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது.
ஆசிரியர்கள் ஜோஸ்பினா, பிரியா, பாப்பாத்தி பத்மா, சுதிமேரி, தேன்மொழி, ஜெயந்தி, சிவபானுப்ரியா, இந்திராதேவி குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

