/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி
/
குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி
ADDED : ஆக 17, 2025 12:31 AM
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் பலியானார்.
ராஜகாபட்டியை அடுத்த கல்லுப்பட்டியை சேர்ந்தவர் தனியார் பஸ் கண்டக்டர் சக்திவேல் 26. இவரது மனைவி பூங்கொடி 23. இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான கோகுல் 8, தீத்தாம்பட்டி தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிததார்.
நேற்று விடுமுறை என்பதால் தாயார் பூங்கொடியுடன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது கோகுல் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவி விட்டு வருவதாக கூறி சென்றார்.
மகன் வராததால் தேடிப் பார்த்தபோது குளத்தில் தேங்கிய பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவன் இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.