ADDED : ஜன 30, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் யசோதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்லமுத்து, சாகுல் ஹமீது, சம்சுதீன், ஊர் முக்கிய பிரமுகர்கள் அழகியண்ண்ன், பாலுசாமி முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் சரவணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் குகப்பிரியா பேசினார். ஆசிரியர் பயிற்சிநர் கலைவாணி கலந்து கொண்டார். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.